தமிழக முதல்வர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அன்பான கோரிக்கை தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீடுகள் மற்றும் கடைகள் முன் டோர் நம்பர், தெரு பெயர் விபரமாக எழுத வேண்டும் என்பதை அரசு அதிகாரிகளுக்கு கூறி உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் அரசு ஊழியர்கள் அதாவது தபால் காரர்கள், கொரியர், சொந்த பந்தங்கள், ஆட்டோ காரர்கள் அனைவரும் முகவரி சுலபமாக கண்டு பிடித்து செல்ல நன்மையாக இருக்கும் என்பதை சமூக ஆர்வலராக கூறிக் கொள்கிறேன்.
உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இணைந்து தமிழக முதல்வர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை வைத்தார்கள்.