நாகப்பட்டினம்,
ஜூன் 12 குறித்த நேரத்தில் காவேரி தண்ணீர் திறக்காத காரணத்தால் கலை இழந்த ஆடி 18 விழா. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் அன்ன கூடையில் உள்ள தண்ணியை கீழே ஊற்றியும் அன்ன கூடைகள் வைத்த தண்ணீருக்கு பூஜை செய்தும் ஏராளமான பெண்களும் ஆண்களும் வழிபட்டும் உரிமை நீரை தராமல் உபரிநீரை திறக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக காவேரி வடிநில கோட்டத்தில் திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் பனங்குடி வாய்க்காலில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெறும் தரையில் வாய்க்காலில் நீச்சல் அடித்து எதிர்ப்பை தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவர் விஜயராஜ் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *