தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் ரூபாய் 19.88 கோடி மதிப்பீட்டில் நீர் தேக்கத் தொட்டிகள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்ததுடன் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடித்திட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாராயணத் தேவன் பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 87.25. லட்சம் மதிப்பீட்டில் செல்லாயி அம்மன் கோவில் சாலையில் 2.5. கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைத்து சாலையின் இரு பக்கங்களிலும் கரைகள் வலுப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் அரசு வழிகாட்டுதலின்படி ஜல்லி தார் உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சாரம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் அம்சா கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன் துர்கா தேவி காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அஹமது தலைமை இளநிலை உதவியாளர் மீனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
