மன்னார்குடி., ஜூலை 30.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தை அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த குளம் 14 வருடங்களாக தூர் வாராமல் அதிகாரிகள் இழக்கடிக்கபட்டு வந்ததனர் திருத்தினாகுளத்தை தூர்வாரிட வேண்டும் என பல முறை அப்பகுதி கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் இந்தாண்டு சோழபாண்டி கிராம மக்கள் ஒன்றினைந்து குளத்தை தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரும் பணியை ஜேசிபி டிராக்டர் உதவியுடன் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சோழபாண்டி கிராமத்தில் உள்ள திருத்தினாங்குளத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதியை வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் மன்னார்குடி வட்டாட்சியரிடம் சோழபாண்டி கிராமத்தில் திருத்தினாங்குத்திற்கு வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட்டதை கண்டித்து சோழபாண்டி கிராமத்தில் திருத்தினாங்குளத்தை தூர்வாரிடகோரி கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் சோழபாண்டி என்ற இடத்தில் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துணை கண்கானிப்பாளர் மணிவண்ணன் , வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கூறி நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *