மன்னார்குடி., ஜூலை 27

திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர்  மேல்நிலைப் பள்ளியில் 1990-1996 ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் பல்வேறு அரசுதுறை , தனியார் துறை மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நிலையில் 30 ஆண்டுகளுக்குபிறகு  இவர்கள்  பேஸ்புக் , வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து இன்று அந்தப் பள்ளியில் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 1996ஆம் ஆண்டு படித்தவர்கள்அவர்களுக்கு  பாடம் கற்பித்த  ஆசிரியர்கள்  வணங்கினர் பின்னர் அனைவரும்  ஒன்று கூடி தனது பழைய பள்ளி நிகழ்வை பரிமாறி கொண்டு குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்து ஒருவரை ஒருவர் கைகொடுத்தும் கட்டி அனைத்தும் தனது நட்பை வெளிப்படுத்தினார்கள்.

முன்னதாக 1990 – 1996 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்த பள்ளியின்  தலைமை ஆசிரியரை பார்ப்பதற்காக  நாதஸ்வர வாத்தியங்களுடன் வீட்டிற்கு சென்று  அவரது காலில் விழுந்து  ஆசிர்வாதம் பெற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து படித்த பள்ளியில் ஆசிரிர்களுருடன் கோக் வெட்டி  மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்  கல்வி வளர்ச்சிக்கு திருவள்ளுவர்மேல்நிலைப்பள்ளிக்கு  அனைத்து உதவிகளையும்  செய்து தருவதாகவும் பேசினார்கள்.

1996 ம் ஆண்டு படித்த பழைய   மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில்  அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியைவெளிபடுத்தினார்கள் பின்னர் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கபட்டது.