திருப்பூர் மாவட்டம், குண்டடம்: குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வருவாய், ஆதிதிராவிடர் நலன், சமூக நலன், மருத்துவம் உள்ளிட்ட 13 அரசு துறைகள் சார்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இம்முகாமில் கொளத்துப்பாளையம், ருத்ராவதி மற்றும் சின்னகாம்பாளையம் பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் 500 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியை ருத்ராவதி பேரூராட்சி துணைத் தலைவர் பொன். மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் செயல் அலுவலர்கள் அசோக்குமார், ஷாபி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
