துறையூர் ஜீலை -25
திருச்சி மாவட்டம் துறையூரில் 10 கோடியே 46லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டிடங்களை 24-07-2026 அன்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார். தமிழ் நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க, திருச்சி மாவட்ட ஆட்சியர். பிரதிக் தயாள், கூடுதல் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ தலைமையில்
ரூபாய் 4 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் மற்றும் ரூபாய் 5 கோடியே 54 லட்சத்து 22ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் (துறையூர் எம்எல்ஏ)
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்.இந்நிகழ்வில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்தன், துறையூர் வட்டாட்சியர் சித்ரா,வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், சாந்தி,சமூக நலத்துறை வட்டாட்சியர் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர்கள் ராமு, ராஜேந்திரன்,தேர்தல் வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் இளவரசி,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்(கட்டிடம்) பத்மாவதி, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் நித்யா, விமலா,ஒன்றிய மேலாளர் பெரியசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ்,அரசு வழக்கறிஞர் செல்லதுரை மற்றும் தமிழக வெற்றி கழக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், மாவட்ட இணைச் செயலாளர் மதன், நகர செயலாளர்கள் வினோத், சூர்யா, ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், ரவி, சிவப்பிரகாசம்,தர்மா,தொகுதி பொறுப்பாளர்கள் நாகராஜ் ஜுவல் சதா, கட்டிட ஒப்பந்ததாரர்கள் பத்மநாதன், புஷ்பராஜ் ,சுரேஷ், வினோத் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுக்கா அலுவலக ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *