கோவை பீளமேட்டில் அமைந்துள்ள ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றனவாலிபால், டென்னி காய்ட்,,சதுரங்கம் மற்றும் த்ரோபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில்,இதற்கான துவக்க விழா,பள்ளியின் தாளாளர் விஜயகுமார், செயலாளர் ஜனனி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..

இதில் பள்ளியின் முதல்வர் ஜனதாம்பிகை முன்னிலை வகித்தார்சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேங்கடபதி கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வாலிபால் போட்டியில், கோவை மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்..

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..

போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற வாலிபால் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாகவும்,பள்ளியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கென டென்னிகாய்ட், போட்டியும் நடைபெறுவதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார்..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் இறைஒளி மற்றும் தேனரசன் ஒருங்கிணைத்தனர்துவக்க விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *