ஜூலை 28-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட தனுஷ் தலைமை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தலைவரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான சங்கர் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடிகர் தனுஷின் பிறந்தநாளை சமூகப் பணிகளின் மூலம் கொண்டாடும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், தொடர்ந்து பல்வேறு சமூக நலப்பணிகளை முன்னெடுக்க உறுதியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நற்பணி இயக்க நிர்வாகிகள்,மணி,அருள் முருகன்,அந்தோணி,வினோத் குமார்,ராஜ் குமார், சங்கர் உட்பட நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *