கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரிலும், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் வழிகாட்டுதலின்பேரிலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிங்கப்பெண் சிறப்புப் படை உதவி ஆய்வாளர் திருமதி லிடியா செல்வி, பெண்களின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு மற்றும் அவசரகால உதவி சேவைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

புதுச்சத்திரம் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு காவல்துறையினரின் அறிவுரைகளை கவனமுடன் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *