பாலமேடு.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்தாட்டக் குழு நடத்திய மாநில மின்ஒளிகைப்பந்து போட்டி காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர்
ஜோதிமணி,துணைத் தலைவர் தவமணிகுமார்,செயலாளர்மயில்வாகனன்,
பொருளாளர் தனசேகரவேல் பாண்டியன்,தலைமை வகித்தனர்.

பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி பொருளாளர் எம்.டி. கார்த்தி,நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் சந்துரு,வரவேற்புரை ஆற்றினர்.பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த போட்டியில் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் சிவகாசி திருச்சி,உட்பட ஊர்களில் இருந்து கைப்பந்தாட்ட போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு

ரொக்கபணம்,கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை காமராஜர் கைப்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பெத்தராஜா,சுரேந்தர்,சிவக்குமார், நன்றி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *