கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.இன்று இரவு சுமார் 8 மணி அளவில், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு காலி நிலத்தில் தரையில் காய்ந்திருந்த முட்செடிகள் மற்றும் புதர்களில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றிக்கொண்டது கோடைக்காலம் என்பதால் காய்ந்திருந்த முட்செடிகளில் தீ மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.


மருத்துவமனைக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த நோயாளிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


​தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி குழாய்கள் மூலம் வேகமாகப் பீச்சியடித்துப் பரவி வந்த தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியம் மற்றும் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.