கல்பாக்கம் ஜூன் 16-
தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டம் போரட்டூர் இன்டர்நேஷனல் அரங்கில், நடைபெற்றது.


இதில் தேசிய அளவில் டேக்வாண்டோவை சார்ந்த 21 அமைப்புகளில், 650 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக தமிழ்நாடு ஃபயர் டேக்வாண்டோ பொதுச் செயலாளரும், மாஸ்டருமான எட்வின் தலைமையில் 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒருவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 10 பேர் இரண்டாம் பரிசு வெள்ளிப் பதக்கமும் 3 பேர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர்.


நிறுவன பொதுச் செயலாளர் மாஸ்டர் எட்வின் தெரிவித்தாவது மாவட்டம்,மாநிலம்,மற்றும் தேசிய அளவில் பல போட்டிகளில் தொடர்ந்து நாங்கள் பங்கேற்று வருகிறோம். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக செயல்பட்டு வருகிறோம் என்றார் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்களுக்கும், தமிழ்நாடு ஃபயர் டேக்வாண்டரின் தலைவர் செங்கை ஆனந்தன், துணைத் தலைவர் ஜான்சன்,பொருளாளர் சேகர்,மற்றும் தலைமை பயிற்சியாளர் தனுஷா அனைவருக்கும் நன்றி என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *