மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்

தென்காசி ஜூன்-14.

தென்காசி சட்டமன்ற அலுவலகத்தை, திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்.
தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டாக்டர் கலைகதிரவனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமை வகித்தார். டாக்டர் கலைகதிரவன் எம்.எல்.ஏ. வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ராணிஸ்ரீகுமார் எம்.பி, எம்.எல்,ஏ.க்கள் அப்துல்வஹாப், ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல், தெட்சண மாறநாடார் சங்கத்தலைவர் காளிதாசன், முன்னாள் எம்.பி. தனுஷ்குமார், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, ஜேசுராஜன், சேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வல்லம் திவான் ஒலி சீனித்துரை, ரமேஷ், பொன்செல்வன், சேக்முகமது, ஜெயா, அன்பழகன், அழகுசுந்தரம், நகர செயலாளர்கள் சாதிர், கணேசன், வெங்கடேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துகுமார் தேமுதிக மாவட்ட செயலாளர் பழனிசங்கர், தொழிலதிபர் சேவியர்ராஜன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து டாக்டர் கலைகதிரவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களை குறைகளை தேடி வந்து கேட்டு நிறைவேற்றி தருவதாகவும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர சுரண்டை பாவூர்சத்திரம் ஊத்துமலை ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் துவக்கப்படும் என்றும் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்வேன் என்று உறுதி கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *