தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4 ஊர்களையும் 9 வார்டுகளையும் உடைய எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில், மற்ற மூன்று ஊர்களிலும் சேர்ந்து ஐந்து வார்டுகள் இருக்கின்றன;
பொட்டலூரணியில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன.
பொட்டலூரணி ஊரைச்சுற்றி உள்ள துர்நாற்றம் வீசிச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துவரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூடக் கோரி மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடை பெற்று வருகின்றன
இன்று751 வது நாள் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது
அப்பகுதி மக்கள் கூறுகையில் பொட்டல் உரணி கிராமத்தை சுற்றி மூன்று துர்நாற்றம் மீசக்கூடிய மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகிறது
இதனால் அப்போது மக்கள் அந்தப் பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது இதனால் அப்பகுதியில் வசி என்ற மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் விஷ வாயுவுகளை திறந்து விடுவதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே இந்த கழிவு மீன் ஆலைகளை மூட வேண்டும் என கடந்த ஏழு ஆண்டாக அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை இதுவரை அரசாங்கம் கண்டுகொள்ளாத காரணத்தினால் இன்று 751 வது நாளாக தொடர் போராட்டத்தை ஈடுபட்டு வருகிறோம். கடந்த திமுக அரசிடம் பல்வேறு தடவை கிராம மக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். ஆனா இன்று வரை போராடிய மக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களது ஒரே கோரிக்கை இந்த பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் நல்வாழ்வுக்கும் எதிராக செயல்படுகின்ற இந்த கடுகு மீன் ஆலையை மூடப்பட வேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய்களுக்கு அனைத்தும் திரும்ப பெற வேண்டும், மற்றும் இந்த ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த கால தி.மு.க அரசு இந்த கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால் மக்களை ஒடுக்கும் பணிகளை மட்டும் தான் செய்து வந்தது இந்தப் பகுதி கிராம மக்களின் கோரிக்கை இதுவும் நடைபெறவில்லை நான் இப்போது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது ஒரு புதிய அரசு எங்கள் மீது கவனம் செலுத்துகின்ற நம்பிக்கை வந்துள்ளது கடந்த காலத்தை போல இல்லாமல் எங்கள் கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்டு அந்த கழிவு மீன் ஆலைகளை மூடுவதற்கும் எங்கள் கிராமத்தைச் சார்ந்த பல்வேறுமிதி போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். தற்போது புதிதாக அமைந்திருக்கும் இந்த அரசின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமைச்சராக உள்ள மதன்ராஜா இதில் முழு கவனம் செலுத்துவார் என நம்புகிறோம். கடந்த ஆட்சியில் உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த கிராம மக்களை மிகவும் வன்மத்துடன் நடத்தினார். அந்த கழிவு மீன் ஆலைகள் இயங்குவதற்கு அவர்தான் பின்புறமாக செயல்பட்டார். கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல் மக்கள் மாற்றத்தை நம்பி வாக்களித்த இந்த புதிய அரசு பொற்லூரணி மக்களுக்கு மாற்றத்தை தரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
