தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது வழக்கம். இந்நிலையில் அண்ணாநகா் 3வது தெரு பகுதியில் தூய்மை பணியாளா்கள் வழக்கம் போல் குப்பை வண்டியில் குப்பைகளை சேகாித்து கதிர்வேல்நகா் பகுதியில் உள்ள நுண் உர மையத்துக்கு கொண்டு சென்றனா்.


அண்ணாநகா் 3வதுதெருவை சோ்ந்த முத்துமாலை என்ற பெண் வழக்கம் போல் குப்பைகளை அந்த வண்டியில் கொட்டி உள்ளாா். அப்போது முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த மணிபா்ஸை காணவில்லை. அதில் 5 பவுன் தங்கசங்கலி வைத்து இருந்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் குப்பை கழிவுகளோடு சோ்த்து மணிபா்ஸை குப்பை வண்டியில் கொட்டி இருக்கலாம் என்று சந்தேகித்து உடனடியாக கதிா்வேல் நகா் நுண் உரமையத்திற்கு விரைந்து சென்று சம்பவத்தை கூறியுள்ளாா். அந்த பகுதியில் சேகாிக்கப்பட்ட குப்பைகளை கொட்டப்பட்டாமல் அப்படியே வண்டியில் இருந்தது.

இதைத்தொடா்ந்து முத்துமாலையில் வேண்டுகோளுக்கிணங்க அந்த வண்டியில் இருந்து குப்பைகளை ஓரு தாா்பாயில் பாதுகாப்பாக கொட்டி தூய்மை வாகன ஓட்டுநா் இசக்கிராஜா தூய்மை பணியாளா்கள் முனீசுவாி, ராணி மற்றும் பொன்செல்வி ஆகியோா் தேடினாா்கள். அப்போது அந்த மூதாட்டி போட்ட வாழை இலை கழிவுகளுக்கு மத்தியில் நகையுடன் மணிபா்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்த 5 பவுன் நகையுடன் மீட்கப்பட்ட மணிபா்ஸை அந்த பெண்ணிடம் தூய்மை பணியாளா்கள் பத்திரமாக ஓப்படைத்தனா். இதனால் தூய்மை பணியாளா்களுக்கு மூதாட்டி நெகழ்ச்சியுடன் நன்றி தொிவித்தாா்.


இந்நிலையில் 5 பேரையும் மாநகராட்சிக்கு அழைத்து தூய்மை பணியாளா்கள் உள்பட 5 பேரையும் ஊக்குவிக்கும் விதமாக மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவித்து பேசுகையில் மாநகராட்சிக்கு பெருமையை ேதடிதந்த உங்களது நோ்மையை பாராட்டுகிறோம் கொரோனா காலக்கட்டத்தில் தாங்கள் ஆற்றிய பணிகளை வாழ்நாளில் மறக்க முடியாது 60 வாா்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் இருந்து பணியாற்றியதை போல் எல்லோரும் இதே போன்று பணியாற்றி மாநகராட்சிக்கு மேலும் பெருமை கிடைக்கும் வகையில் எல்ேலாருடைய பணியும் இருக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனா்.


விழாவில் நகா் நல அலுவலா் கணேஷ், பகுதி சுகாதார ஆய்வாளா் சந்தனகுமாா் திமுக பகுதி செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *