கும்பகோணம்: தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கம் கல்லூரிகளில் 1997 முதல் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரசினர் கலைக்கல்லுாரியில் 2025 – 2026ம் கல்வியாண்டில் பணி நிறைவு பெறும் தமிழ்த்துறைத் தலைவர் மா.சேகர் பாராட்டு விழா, நேற்று ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மோசஸ்,தஞ்சை மாவட்ட கல்லூரி கல்வி இயக்குனர் குணசேகரன்,ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.இதில் அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,ஆகியோர் பணிநிறைவை பாராட்டி பொன்னாடை போர்த்தியும், சந்தனமாலை அணிவித்தும், மரியாதை செய்தனர்.பணி நிறைவு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர்
மா. சேகர் ஏற்புரை நிகழ்த்தினர். விழாவில் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *