தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கியும்,அன்னதானம் வழங்கியும்,கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தியும் என பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே அண்ணாமலையின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள்,
அண்ணாமலையின் திருவுருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான ஏழை எளிய பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் அவரது பிறந்த நாள் விழாவை மிக கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ் விழாவில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சதீஷ், ஆறுமுகம், ஜம்போடை சங்கர், காஞ்சி ஜீவானந்தம், அதிசயம் குமார்,அரிகிருஷ்ணன், மகேந்திரன்,மோகன், ஜானகிராமன், தியாகு,மணி,மோகன்,பரத்,தணலஷ்மி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
