தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சடையபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எரகாம்பட்டி, கொழுமங்குழி, பெரியகுமாரபாளையம் மற்றும் சங்கரண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாளக்கரை பகுதிகளில் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சி எஸ். சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய அணி தலைவர் ஈஸ்வரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மயில்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ரவி, மணிவேல், ஆறுச்சாமி, சின்னதுரை, எஸ்.வி.எம். செல்வம், சதிஷ்குமார், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *