திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்.வைகாசி பிரம்மோற்சவத்தின் 7 வது நாளான திருவிழாவின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட 21 அடி உயர தேரை திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்
கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி பிரம்மோற்சவத்தின்.
முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற்றது உற்சவர் பவளவண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு பிரம்மாண்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பச்சைப் பட்டுத்தி தங்க ஆபரணங்கள் அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 21 அடி உயர தேரில் அலங்காரத்துடன் வீற்றிருக்க கோலாட்டம் பொய்க்கால் குதிரை மயிலாட்டம் சிலம்பாட்டம் செண்டை மேளம் நாதஸ்வர மேளதாளம், பம்பை உடுக்கை, உருமி மேளம், கெளரி கலை, கோனதார, உள்ளிட்ட மேளதாளங்கள் இசைக்க ராட்சத கொரில்லா பிரம்மாண்ட அனுமன் மற்றும் பெருமாள் தாயார் ஆண்டாள் வேடமிட்டு ஊர்வலமாக செல்ல தேர் திருவிழா களை கட்டியது.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நான்கு மாட வீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தேர் உற்சவத்தை காண்பதற்கு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர் நான்கு மாட வீதிகளில் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு வரவேற்றனர் வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தேரில் வந்த பவள வண்ண பெருமாளுக்கு தேங்காய் பழம் பூ வைத்து அர்ச்சனை செய்தனர். வழிநெடுகிலும் பிரசாதம் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் காலை முதலே வந்து கல்யாண வரதராஜ பெருமாளை சாமி தரிசனம் செய்து அர்ச்சனை செய்து தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
