புதுச்சேரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கைவினைஞர்களை முதன்மையாகக் கொண்ட MSME-களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி , MSME செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் (RAMP) திட்டத்தின் கீழ், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய (DIC) வளாகத்தில் 29.10.2025 அன்று இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மற்றும் புதுச்சேரி தொழில்துறை மேம்பாடு வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் (PIPDIC) இணைந்து ஏற்பாடு செய்தன.


இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகம் உலக வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட்ட RAMP திட்டம், கடன், தொழில்நுட்பம், சந்தை இணைப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் MSME தொழில் வளர்ச்சிக்கான உகந்த சூழல் அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் மற்றும் நிறுவன வலுப்படுத்தல் மூலம் நாடு முழுவதும் உள்ள MSME-களின் போட்டித்தன்மை, மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த இந்த திட்டம் முயல்கிறது.


நிகழ்ச்சி EDII ன் இணைப் பேராசிரியர் டாக்டர் அனந்தவல்லி ரமேஷ் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து EDII ன் உதவிப் பேராசிரியர் திரு.சமித் குமார் பிரமுகர்களை அறிமுகப்படுத்தி பாராட்டினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசின் அரசுச் செயலாளர் (தொழில்கள் மற்றும் வணிகம், தீயணைப்பு சேவை மற்றும் கலால்) திருA. விக்ராந்த் ராஜா, IAS, இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, “RAMP திட்டத்தின் மூலம், MSMEகள் தங்கள் நிதி மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்தி நிலையான வணிக வளர்ச்சியை அடைய முடியும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் MSMEகள் தங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், புதுச்சேரி பிராந்தியத்தில் நீண்டகால தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கைவினைஞர்களிடையே கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.


நிகழ்ச்சியின் தொடக்க விழாவை தொடர்ந்து தொழில்நுட்ப முதல் அமர்வில் புதுச்சேரியின் நிதி எழுத்தறிவு ஆலோசகர் கே. ராஜா மற்றும் புதுச்சேரியின் INDSETI ன் மூத்த மேலாளர் ஜோசபின் சாய்ராணி ஆகியோர் “MSMEs களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த புரிதல்” என்ற தலைப்பில் பேசினார்

இரண்டாம் அமர்வில் EDII ( பெங்களூரு பிராந்திய அலுவலகம்) ன் இணைப் பேராசிரியர் டாக்டர் அனந்தவல்லி ரமேஷ், “வணிக மேம்பாடு, வருவாய் மற்றும் இடர்களை கையாளும் யுக்தி ” என்ற தலைப்பில் பேசினார்


மூன்றாம் அமர்வில் வேலூரில் உள்ள TIPS அகாடமியின் இயக்குனர் விஜயகணேஷ், “பட்ஜெட், பணப்புழக்கம் மற்றும் மூலதன மேலாண்மை” என்ற தலைப்பில் பேசினார்.
நான்காம் அமர்வில் புதுச்சேரி, கோனேரிகுப்பத்தில் உள்ள ஆதித்யா மேலாண்மை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் கே.மதனே, “டிஜிட்டல் நிதி சார்ந்த கருவிகள் மற்றும் இணக்க விழிப்புணர்வு” என்ற தலைப்பில் பேசினார்.
அவரைத் தொடர்ந்து , புதுச்சேரி, மாவட்ட தொழில் மையத்தின் இயக்க மேலாளர் திரு.K.ஜெயராமன், பல்வேறு MSME திட்டங்கள் மற்றும் அரசின் தொழில் வளர்ச்சி முயற்சிகளை விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி, மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர். திருG.கோவிந்தராஜன் கலந்து கொண்டார் மேலும் 90 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் MSME கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிதி திட்டமிடல் மற்றும் நிறுவன மேலாண்மை குறித்த விளக்கங்களைப் பெற்றனர்.

குறிப்பாக தொழில்நுட்ப அமர்வுகளில் நிதி சார்ந்த முடிவெடுப்பது மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகள் மூலம் தங்கள் வணிகங்களை வலுப்படுத்துவது குறித்த பயனுள்ள செய்திகளை கைவினைக் கலைஞர்கள் தெளிவு படுத்திக் கொண்டனர்.
EDII புதுச்சேரி திட்ட அலுவலகத்தின் மேலாளர் திருN.தினேஷ் பாபு நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.