புதுச்சேரியில் பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள படம் திறப்பு விழா நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் உருளையன்போட்டை தொகுதி திமுக பொறுப்பாளர் கோபால், புதுவை மாநில தேவர் பேரவை தலைவர் குணாசிங் மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் மோகன், அருணகிரி, கதிரேசன், முருகேசன், பொற்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
