புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி இஷிதா ராட்டி அவர்கள் தலைமையில் முதலியார்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் தொகுதி செயலாளர்கள் நடராஜன், திராவிடமணி, மாணவர் அணி துணை அமைப்பாளர் சரவணன், காங்கிரஸ் சார்பில் நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் தலைவர் சண்முகம், பிசிசி உறுப்பினர் அர்ஜூணன், முதலியார்பேட்டை ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்¬கா¬ளர் பட்¬டி¬யல் சிறப்பு தீவிர திருத்¬தப் பணி நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அவசரகதியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வது என்பது வாக்காளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர் பட்டியல் சீரமைக்கபட வேண்டும் என்பதை திமுக மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர கதியில் அதுவும் 23 ஆண்டுகாலம் செய்யாமல் இருந்த இந்த திருத்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்தில் செய்ய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய திமுக–காங்கிரஸ் பிரதிநிதிகள் இதற்கு என்று கால அவகாசம் அளித்து வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிருத்திருப்பதை புதுச்சேரியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் செயல்படுத்துவார்கள் என்றும் அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி இஷிதா ராட்டி தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்து திமுக மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
