வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த புலிகுடியான் பன்னீர்செல்வம் என்பவர் நைஜீரியா நாட்டில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை மற்றும் பைப் லைன் பணிக்காக அனுபவமிக்க நபர்கள் தேவைப்படுவதாக கூறி பல்வேறு நபர்களிடம் தங்களது நிறுவனத்தில் அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் எனக் கூறி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் தலா ஒரு லட்ச ரூபாய் பெற்று வேலை வாங்கித் தராமலும் பணத்தையும் திரும்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதேபோல் கன்னியாகுமரி, கேரளா ,திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 29 நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய் வீதம் 29 லட்ச ரூபாய் மோசடி ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர்.
பேட்டி :கார்த்திகேயன் பாதிக்கப்பட்டவர்
