கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
ஆதி திராவிட மக்களுக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா செய்தவர்களை கண்டித்தும் பட்டாவை ரத்து செய்ய கோரியும் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சூரிய கலைவாணன் சிவா செல்லப்பா மற்றும் கிராம நிர்வாகிகள் பெரியசாமி முத்து கருப்பன் பெரியசாமி நட்சத்திரம் ராமலிங்கம் தர்மலிங்கம் குமார் பாலகிருஷ்ணன் தமிழ் பாண்டி மலர் கொடி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்
