அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார்
மாநில துணைத்தலைவர் ராகவன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் மாவட்ட செயலாளர் செல்வி நிறைவுறையாற்றினார் அரியலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் காந்தி தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் அம்பேத்கார் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்
தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள் மாவட்ட பொருளாளர் பேப்டிஸ்டா அனைவருக்கும் நன்றி கூறினார் உச்ச நீதிமன்ற வேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும் 11 மாத கால ஒப்பந்த பணிமுறையை அறவே ஒழித்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது
