நீடாமங்கலம்
நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் கனில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தன விவாசயிகள் நெல் மணிகளை உலர வைப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வரை உயர்த்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்வரிடம். கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஒன்றிய அரசிடம் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் கடிதம் எழுதினார் அந்த வகையில் நெல்லின் ஈரப்பதம் 22 சதவிகிதமாக உயர்த்துவது தொடர்பாக நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர்களான இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் .பி.கே.சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் .அண்ணாதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர் நெல் மாதிரிகளை சேகரித்து எடுத்த சென்றுள்ளனர்.
