கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தும்படி அனைத்து தனி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க திட்டம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.