தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 252 மனுக்களை பெற்றுக்கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 252 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகள் நலத் துறையின் சார்பில் தலா 1.14000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அபிதாஹனிப் இயக்குனர் தனித்துணை ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
