திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்.சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர்.சுப்பிரமணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி கோட்டாட்சியர், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் முருக பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.