கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்பாபட்டி ஆச்சிகிழவி அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் கம்பம் நகராட்சி சமுதாய கூடத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.இந்த முகாமில் திமுக வழக்கறிஞர்கள் துரை நெப்போலியன் ஈஸ்வரன் உள்பட ஆச்சிகிழவி அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும மருத்துவ பயனாளர்கள் பலர் பங்கேற்றனர்.