தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்காக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் குறும்படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் அளித்தல் துறை அமைச்சகத்தின் நாசா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சென்னை தோழமை தொண்டு நிறுவனம் மூலம் தேனி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் என 40 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் திங்கட்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அன்னஞ்சி சமூக நீதி மேல்நிலைப்பள்ளி பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 10 நாட்களுக்கு 40 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் கலைக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.