குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்–கோவை சாலையில் அமைந்துள்ள குண்டடம் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற போன் பழமை வாய்ந்த ஸ்ரீ கொங்கு வடுகநாதர் சாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார் தலைமை தாங்கினார். பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் யோகேஸ்வரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் கொங்கு ரமேஷ், பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *