வில்லியனூர், ஆக. 6: புதுச்சேரி வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை 508 பால்குட அபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி மாடவீதிகளை வலம் வந்து, பின்னர் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த 508 பால்குடங்களின் பாலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமாக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். கோயில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *