தேனி அல்லிநகரம் நகராட்சியில் 10 ஆவது வார்டில் நடைபெற்ற சிறப்பு வார்டுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி 10 ஆவது வார்டில் திங்கட்கிழமை நடைபெற்ற சிறப்பு வார்டுக் கூடத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும் போது தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடத்த ஆணையிட்டு உள்ளார்
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு கூட்டங்கள் திங்கட்கிழமை இன்று முதல் நடைபெறுகிறது தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேபோல் நடைபெறும் இச் சிறப்பு வார்டுக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தெருவிளக்கு பராமரிப்பு திடக்கழிவு மேலாண்மை சாலை பழுதுகள் பாதாள சாக்கடை பூங்காக்கள் பராமரிப்பு நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்த கோரிக்கைகள் இருந்தால் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கலாம் மற்றும் மனு அளிக்கலாம் பொதுமக்களால் தெரிவிக்கப்படும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அரசின் சார்பில் நடத்தப்படும் இது போன்ற சிறப்புக் கூட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் இந்தக் கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி திமுக நகர செயலாளர் சூர்யா பாலமுருகன் உள்பட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
