சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகர பொதுச்செயலாளர் இ. லோகேந்திரராஜன் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியரின் 224 வது குருபூஜை திருநாளை முன்னிட்டு நகரில் கண்ணாடி கடை முக்கில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர் மன்ற கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நகர நிர்வாகிகள் பொதுச் செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்