கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட கடவூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடவூர்-குளத்தூரில் ஒன்றிய தலைவர் ஸ்ரீவிகான் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளரும், பா.ஜ.க கரூர் மாவட்ட செயலாளருமான காவேரி மோகன்ராஜ் மற்றும் கரூர் மாவட்ட துணை தலைவர் பி.ஆர். ஆறுமுகம்,மாவட்ட செயலாளர் மாணிக்கம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்வதன் அவசியம் மற்றும் அதன் எதிர்கால முக்கியத்துவங்களை விளக்கினர்.
மாவட்ட செயலாளரும் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளருமான காவேரி மோகன்ராஜ் எதிர்வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கான மனித சக்தியினை ஒன்றியங்களில் உருவாக்குவதன் அவசியம் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக நிர்வாகிகள் அடுத்த 30 நாட்கள் செய்ய வேண்டிய முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்த விளக்கங்களை அளித்தார்.மேலும் பா.ஜ.க மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் கூறியபடி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலே கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெற்று கொடுக்க நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதற்கான முன்னோட்டமாக மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை சக்தி கேந்திர அளவில் நமது நிர்வாகிகள் தொடங்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றியத்தினை சார்ந்த மாவட்ட, மண்டலஅணி பிரிவு நிர்வாகிகள் லோகநாதன்,பொன்னுச்சாமி,ராமசாமி,தங்கவேல்,வடிவேல்,மணிகண்டன்,
செந்தில்குமார் Ex Army,அண்ணாதுரை,முத்தையா மணியார் நாட்டாமை ரத்தினம்
ரங்கராஜ் பாஸ்கரன் P.சுரேஷ்,M.சுரேஷ், திருநாவுக்கரசு,வேலு குமார்,சிநேக பிரியா
மற்றும் கார்யகர்த்தாக்கள் பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர்
