மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டுராம நாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் ஜெயந்தி விழா நடக்கிறது. இதுபோல், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கும். அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு ஊர் களில் இருந்தும் ஏராளமான மக்கள் வாகனங்களில் மதுரை வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த குருபூஜை விழாவில் = துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன், பா.ஜனதா – சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல் வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், தேவர் ஜெயந் தியை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்த மான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா தொடர்பாக, தேவர் அமைப்பினர் மற்றும் பார் வர்டு பிளாக் கட்சி நிர்வாகிக ளுடன் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட் டம் குறித்து போலீசார் கூறுகையில், மதுரை கோரிப்பா ளையம் தேவர் சிலை பாது காப்பு மற்றும் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிப்பாளையம் தேவர்சிலைக்கு வரக்கூடிய பால்கு டம், முளைப்பாரி ஊர்வலங் கள் மற்றும் முக்கிய தலைவர் கள் வருகை சம்பந்தமான பாதுகாப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இது போல், மதுரை மாநகர் மற் றும் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகராம நாதபுரம் மாவட்டம் பசும் பொன்னுக்கு வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறை கள் மற்றும் செல்லக்கூடிய வழித்தடங்கள் மற்றும் அதற் காகபோலீஸ் நிலையங்களில் பெறக்கூடிய அனுமதி சீட்டு குறித்தும், சோதனை சாவடி களில் பணிபுரியும் போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்தும் அறிவுறுத் தப்பட்டது. மதுரை மாநகரத் தில் தேவர் ஜெயந்தி பாது காப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தெரிவித்தனர்.
