இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம் பி.வி.கரியம்மாள் நினைவாக மணிமண்டபம் அமைக்க தீர்மானம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி. பள்ளிபட்டியில் இந்திய குடியரசு கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான ஜான் பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மறைந்த இந்திய குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியம்மாள் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது, அவரின் நினைவாக அரூர் பகுதியில் மணிமண்டபம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய கட்சி பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது.

எம். ராஜேந்திரன் புதிய மாவட்ட தலைவராகவும், ஆர். பழனிசாமி பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். மற்ற பொறுப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என கட்சி அறிவித்தது கூட்டத்தில் பல சமூக முன்னேற்றம் தொடர்பான தீர்மானங்களும் ஏற்கப்பட்டன.

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் புதிய தொழிற்சாலை அரசு அமைக்க. வேண்டும், பொம்மிடி–வேப்பாடி ஆற்றில் புதிய அணைக்கட்டு அமைக்க வேண்டும், பொம்மிடியில் இருந்து அரூர் பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற வேண்டும்,பஞ்சமி நிலங்களை மீட்க தனி ஆணையம் அமைத்து பட்டியல் சமூக மக்களுக்கு நிலங்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஆலோசனைக் கூட்டத்தில்
தர்மபுரி அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்
இந்திய குடியரசு கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் ஸ்ரீ வெங்கடேசன் வடகரை மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள்
கலந்து கொண்டனர்