தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் கிரிவலப் பாதையில் ட்ரீ டொனேட் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இந்த விழாவினை ஃபவுண்டர் நாகராஜன். நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 120க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது இதுவரை அஞ்சு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் 5 கோடி மரக்கன்றுகள் நடுவது அவர்களது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ட்ரீ டொனேட் பவுண்டேஷன் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.