காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி குப்பன் ஆலோசனையின்படி,முன்னாள் மத்திய அமைச்சரும்,முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமானவாழப்பாடி ராமமூர்த்தியின் 23வது நினைவுனாளினை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி சாலை காய்கறி சந்தை அருகே உள்ள காமராஜர் சிலை அருகில் வாழப்பாடி ராமமூர்த்தி யின் திருவுருவப் படத்திற்கு,எல். என். கே. கிஷோர் குமார் தலைமையில்,இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவரும், காஞ்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவருமான அவளூர் ஜி. சீனிவாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அப்பகுதி ஏழை, எளிய மக்கள் 23 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,
மாவட்ட பொதுச்செயலாளர் பி. டெல்லி பாபு, எஸ். சாபுபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
