C K RAJAN Cuddalore District Reporter
9488471236…
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்
நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நகர்ப்புற மக்களின் நலன் கருதியும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையிலும் நகராட்சி பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலை, சுகாதாரமான குடிநீர்,வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பல்வேறு திட்டங்களின் வாயிலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ.945 இலட்சம் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடைபெறுவதை விஸ்வநாதபுரம் பகுதியிலும், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை திருகண்டேஸ்வரம் பகுதியிலும் ஆய்வு செய்யப்பட்டது. திருகண்டேஸ்வரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.130 இலட்சம் மதிப்பிட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் நடைபெறுவதையும், ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், ரூ.172 இலட்சம் மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் ரூ.215 இலட்சம் மதிப்பீட்டில் சோழவல்லி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகர பேருந்து நிலையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பண்ருட்டி நகராட்சி பகுதியில் ரூ.219 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும்,குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளாக லட்சுமிபதி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெருவதையும் பண்ருட்டி பேருந்து நிலையம் ரூ.470 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கடைகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவதையும், ரூ.582 இலட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி தினசரி சந்தை கட்டுமான பணிகள் நடைபெறுவதையும்,ரூ.500 இலட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தினைத் தேர்வு செய்வதை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மழைக்காலம் என்பதால் சாலைப் பணிகள், வடிகால் பணிகள் போன்ற அத்தியவாசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக முடிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், இணை இயக்குநர் இலட்சுமி, ஆணையர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணராஜன்,ஆணையர் பண்ருட்டி காஞ்சனா மற்றும் நகராட்சி பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
