கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
முகாமில் சங்கத் தலைவர் லயன் K.S. பாலசுப்ரமணியன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார் வட்டார தலைவர் லயன் .Er.T.பாலகிருஷ்ணன்,செயலாளர் லயன்.N.ராஜாராமன்,பொருளாளர் லயன்.T.K.ஜோதிராம்,சேவை செயலாளர் லயன். Er.R.சங்கர் மற்றும் முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள் அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 221 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கண்புரை கண்டறியப்பட்ட 109 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன முகாமிற்கான ஏற்பாடுகளை சங்க பொருப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
