கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் சி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அண்ணாரது சட்டமன்ற உறுப்பினர் காலங்களில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு எண்ணற்ற பல மக்கள் பயன்பெறக்குரிய திட்டங்களைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குறிப்பாக பண்ணந்தூர் பெரிய ஏரியிலிருந்து புதுக்கோட்டை ஏரி என்று அழைக்கப்படும் சின்ன ஏரிக்கு சோலார் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல திட்டங்களை வகுத்து எண்ணற்ற விவசாய நிலங்கள் பயன்பெற உதவி செய்தவர்.

அதேபோல பண்ணந்தூர் அரசம்பட்டி இடையான தார் சாலை அமைத்தல் தடுப்பணை கட்டுதல் பென்டரஅள்ளி உயர் மட்ட பாலம் என சொல்லில் அடங்கா பல திட்டங்களை கொண்டு வந்து இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த கொடை வள்ளல் அன்னார் அவர்களது பிறந்த நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்ணந்தூர் பழனிச்சாமி அவர்கள் முன்னாள் எம்எல்ஏ சீவி ராஜேந்திரன் அவர்களின் இனிய பிறந்த நாளை முன்னிட்டு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்