கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள் – 7 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று கூறியதால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.
தென்னிலை அடுத்த கூனம்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த கிராமத்தை சுற்றி விவசாய நிலங்களும் உள்ளன.வெள்ளி இரவு அரவக்குறிச்சி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் கூனம்பட்டி கிராமத்திற்கு சென்று ஜேஎஸ்டபிள்யூ நிறுவன பணிகளை யாரேனும் தடுக்க நினைத்தால் அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டினர்.
உடனே கொந்தளித்த கூனம்பட்டி கிராம மக்கள்.இக்கிராமம் வழியாக ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள், உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் செல்வதால் அவ்வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என கட்சி சார்பற்ற அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நள்ளிரவு, பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் த.பிரபாகரன் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு நா.பிரேம்நாத் பங்கேற்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாளை சனிக்கிழமை வந்து ஆட்சியரை சந்திக்குமாறும் அதுவரை எந்த இடையூறும் நேராது என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் த.பிரபாகரன் மற்றும் மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு நா.பிரேம்நாத் தலைமையில் வந்த கிராம மக்கள் மனு அளிக்க வந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஐந்து முதல் ஏழு நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட முடியும் என்று கூறியதால் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் முக்கியஸ்தர்கள் கை குழந்தைகளுடன் சென்ற பெண்கள் மூன்று பேர் உட்பட ஏழு பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
தற்போது உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வரும் திங்கள் அன்று கூனம்பட்டி கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்தார்.
