தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
குண்டடம் அருகே பயங்கரம்-மூதாட்டியின் தலையை துண்டித்த பேரன்
அடிக்கடி அறிவுரை கூறியதால் வெறிச்செயல்
குண்டடம் அருகே அடிக்கடி அறிவுரை கூறியதால், மூதாட்டி யின் தலையைதுண்டித்த பாசக்கார பேரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள பெரியகுமாரபா ளையம் செட்டிகாரதோட்டத்தை சேர்ந்தவர் பச்சியப்பர். இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 80). பச்சியப்பர் இறந்துவிட்ட தால், மயிலாத்தாள் தனது மகன் கோவிந்தராஜ், விவசாயியான பேரன் விஜயகுமார் (40) ஆகியோருடன் வசித்து வந்தார். விஜ யகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும், பின் னர் வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் வழக் கமாக கொண்டிருந்தார். இதை அவரது பாட்டி மயிலாத்தாள் கண்டித்தார். மது குடிக்காமல் ஒழுக்கமாக வீட்டிற்கு வருமாறு பலமுறை அறிவுரை கூறினார். ஆனால் பாட்டியின் அறிவு ரையை கொஞ்சம் கூட, விஜயகுமார் கேட்கவில்லை.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை, மயி லாத்தாள் வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து இருந்தார். கோவிந் தராஜ் வெளியில் சென்று விட்டார். இரவு 7 மணி அளவில் விஜ யகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மயி லாத்தாளிடம் செலவுக்கு பணம் தருமாறு, விஜயகுமார் கேட் டார். ஆனால் மயிலாத்தாள் பணம் இல்லை என்று கூறிவிட் டார். மேலும் பேரனை திட்டியதோடு, இதுபோல் மது குடித்து விட்டு, இங்கு வரக்கூடாது எனவும் அறிவுைர கூறினார்.
தலை துண்டித்து கொலை:::::
இதனால் ஆத்திரம்அடைந்த விஜயகுமார் நேராக வீட்டுக்குள் சென்றார். அங்கு இருந்த அரிவாளை எடுத்து வந்து, ஆடு அறுப்பது போல் மயிலாத்தாள் தலையை மட்டும் தனியாக அறுத்து துண்டித்தார்.. இதனால் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி துடிதுடித்து இறந்தார். கொலையான மயிலாத்தாளின் உடல் கட் டிலிலும், தலை தரையிலும் கிடந்தது. பின்னர் விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை யாளி விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுகுடிக்காதே என்றுஅறிவுரை கூறிய மூதாட்டியின் கழுத்தை அறுத்து பேரன் கொன்ற சம்பவம் குண்டடம் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
