ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், சாவடிப்பாளையம் கேட்புதூர் ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததை ஒட்டி வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாலத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து சரி செய்ய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக ஈரோடு_ கரூர் சாலை,ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளி வலப்புறம் தம்பிரான் வலசு (வெள்ளக்கோயில்- சங்ககிரி சாலை) பட்டறை என்ற பகுதியில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி ( வலது புறமாக) சாவடிப்பாளையம் 4 _ ரோட்டில் இணையும்படியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் அவர்கள்,மண்டல கூடுதல் முதன்மை பொறியாளர் சரவணன் அவர்கள் முதன்மை பொறியாளர் கார்த்திகேயன் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.