மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மற்றும் புதுச்சேரி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமை பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தொடங்கி வைத்தார்

வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், கண், காது, தொண்டை, எலும்பு மருத்துவம் என பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்

இருதயம் தொடர்பான பரிசோதனைகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை தேவையான அவர்களுக்கு அது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்த மருத்துவ முகாமில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்