துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. கோட்டப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் 23-10-2025 அன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார் துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.

முகாமில் ஒன்றிய செயலாளர்கள் ந.முத்துசெல்வன், அர.ந.அசோகன்,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், வட்டாட்சியர் சிவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கோவிந்தராஜ், ஸ்ரீராம், வட்ட வழங்கல் அலுவலர் முத்து, காவல் ஆய்வாளர் முத்தையன், காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, ராஜசேகர், குமார் ,முன்னாள் ஊராட்சி தலைவர் மெர்சி ராஜா,ஒன்றிய துணை செயலாளர் வைரி மணிகண்டன்,
ஊராட்சி செயலர்கள் பெருமாள், அசோகன், மதன், பிரகாஷ்,சுரேஷ்,வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோட்டப்பாளையம் கிராம மக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இம்முகாமில் வருவாய்த்துறை,மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பெருமாள் சிறப்பாக செய்திருந்தார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்