பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், தேவரின் தங்க கவசத்தை
கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்
மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து தேவர் நினைவாலய பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.

பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2014ம் ஆண்டு அப்போது ரூ.ஐந்தரை கோடி மதிப்பில் 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அணிவித்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி முன்னிட்டு ,அந்த தங்க கவசத்தை எடுக்கப்பட்டு விழா முடிந்த பின்பு மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப் பட்டு வருகிறது. கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் இருவரும் வங்கியில் நேரில் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றுக் கொள்வார்கள், அதனை தொடர்ந்து விழா முடிந்த பின்பு மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் தங்க கவசத்தை கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மதுரை அண்ணா நகர் இந்தியன் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், மலேஷியா பாண்டியன், மாணிக்கம், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயம் பெருமாள் மற்றும் ஆணி முத்து , மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி முன்னிட்டு வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு விழா முடிந்த பின்பு வங்கியில் வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும், 63-வது குருபூஜை யும் வருகின்ற 30ம் தேதி வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரரும், தெய்வீகமும் , தேசியமும் இரு கண்களாக கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தியாகத்தை போற்று வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசை எடப்பாடியார் வலியுறுத்தி யுள்ளார். தற்போது எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக நிர்வாகிகளாகிய நாங்கள் அனைவரும் வங்கியில் இருக்கும் தங்க கவசத்தை எடுத்து தற்போது குருபூஜைக்காக வழங்கி உள்ளோம் என கூறினார்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு காரில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கவசம் அணிவிக்கப்பட்டது அங்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி .உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தங்க கவசத்தை அணிவித்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க பசும்பொன் தேவர் சிலைக்கு கழகத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொண்டு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பசும்பொன் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.